புதன், 28 செப்டம்பர், 2016

மிக அந்தரக் கணம்பரிவகலாப் பார்வை.
தொடுகையின்
கடைசிக் கணம் வரை
எஞ்சும் அன்பு .

முடிவில்லாத மூன்று முத்தங்கள்

முன் நின்ற நீ
ஒரு கணம் தாய்
அதே கணம் குழந்தை

உயிரூறிய வார்த்தைகளையும்
சில உருண்டைச் சோற்றையும்
எனக்களித்தாய்

மலரரும்பிய பொழுதில்

நான் வழங்கிய சோற்றில்
மிகுதி சொல்லாத வார்த்தைகளையும்
சொல்ல முடியாத பரிவையும்
குழைத்து உனக்களித்தேன்

பின்
கணங்கள் நம்மைப் பிரித்தன

நீளச் செல்லும் வாழ்வு
"பின் தொடரும் ..." என்ற
வார்த்தையில் வாழ்கிறது

இனி எப்போதும்
மனிதக் குட்டியொன்றுக்குக் கிடைக்கும்
அரிதான முத்தங்களில் சிலதை
ஈரம் காயாத கன்னங்கள்
மறக்கப் போவதில்லை

என்னருஞ் சுடரே ,
காமத்தில் காதலிருக்கிறது
அன்பில் முத்தமிருக்கிறது .

நன்றி - தள வாசல் கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக