புதன், 28 செப்டம்பர், 2016

எல்லாமே பார்க்கப் படுகின்றன-எல்லாமே விற்கப் படுகின்றன - எல்லாமே ,எல்லாமே
1.எங்கட அண்ணைய எங்க  வச்சு  வேல  வாங்கிறீங்கள் ? எனக்கு சாப்பாடும் வேண்டாம்  ஒண்டும்  வேணாம் எங்கிட அண்ணைய விடுங்கோ '

2.என்ன சுட்டாலும் பரவாயில்ல நான் தனிய இருந்து என்ன செய்ய ,ஆருக்குத் தெரியும்  இண்டைக்கு இரவே எனக்கு வெடி வைக்கலாம் ,அதுக்குள்ள அம்மாவ  (நவநீதம் பிள்ளையை )  பார்க்கோணும் .

3.என்னட்ட ஆதாரம் இருக்கு  எண்ட மகன்  பூஸாவில தான் இருக்கிறான் இந்தாங்கோ படம் ,இந்த லெட்டர் சனாதிபதி அனுபினது இதுக்கும் பிறகும் காணேல்ல எண்ட பிள்ளைகள,

4.வாப்பா காணாம போய் 8 வருஷம் ,இனியும் கிடைப்பார் எண்டு நம்புறம் (அல்லது அப்படி நம்ப முயற்சிக்கிறார்கள் ) ,எனக்கு 3 பிள்ளையள்.

5.கண்ணீரும் சோறும் தான் சாபிடுரம் ,ஒரு பெண் :-ஆங்கிலத்தில பேசி போட்டு வாய்க்குள்ள தூசனம் வர "இந்த நாயள பத்தி கதைச்சா தூசனம் தான் வருது "

6.அபே கமுவ ,ஓனே ...இப்பிடியும் கொஞ்ச பேர் கத்தினாங்கள் எனக்கு விளங்கேல்லயாழ்ப் பாணத்தில் இன்று இடம்பெற்ற  போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் காதில் விழுந்த சொற்கள் ,எனக்கு கவிதை வரி ஒன்று நினைவுக்கு வந்தது

,"யாரும் யாருக்கும் ஆறுதலாயிராத நாள் "

(நிலாந்தன் )

அழ அழ ,அழுவதே மொழி ,அழுவதே மருந்து .என்னை எனது மொழியில் அழ விடுங்கள் ,எனது பாவங்களை எனது கண்ணீர் தான் கழுவ வேண்டும் .

இன்று மீடியாக்கள் நிரம்பிய யாழ் நூலகம் ,துயரத்தால் ,அழுகையால் அடை பட்டிருந்தது . நவநீ அம்மா வாறா எண்டு கிழவிகள் எல்லாம் வீதியில் புரண்டு அழுதனர் .ஒரு சின்ன தங்கச்சி அழுத அழுகைய எப்பிடியெல்லாம் படம் பிடிச்சாங்கள் ,அட அட

,கண்ணீரை  விற்காதீர்கள் ,துடைக்க வேண்டிய நேரத்தில் அதை யாரவது துடைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டு ,அதே கூட்டத்தில் .அதே மந்தையில் ,ஒரு தவிர்க்க முடியாத ஆடாய்,நான்கு தடவைக்கு மேல் அழச் சக்தியற்று வெயிலில் நின்று கொண்டிருந்தன்.

மக்கள் ,எல்லாரிட்டையும் எல்லாத்தையும் சொல்லிச்சினம் ,மிஷனரிகள் இருந்து வந்த சில அருட் சகோதரிகளும் அதை கேட்டு அழுது கொண்டிருந்தனர் ,

நிறைய  வியாபாரிகளும் தங்கள் வேலையை கலை நேர்த்தியோடு செய்து கொண்டிருந்தனர் , எனக்கு அவர்களின் உணர்ச்சி தெரியாது ,எதற்காக செய்கிறார்கள் தெரியாது ,ஆனால் அந்த மக்களின் கண்களை நிமிந்து பார்க்கிற சக்தி எனக்கில்ல ,அவர்கள் தேடியதெல்லாம் ,ஒரு மீட்பர் .

ஒரு அம்மா ஏசுவையே சிலுவையில அறைஞ்சதுக்கு பேர் தான் அரசாங்கம் எண்டா

,இன்னொருத்தர் ,எத்தின பேர செம்மணியில புதைச்சிருப்பாங்கள் ..இன்னொரு அண்ணை சொன்னார் ,இரவு எழும்பி அப்பா எங்க எண்டு கேக்கிற பேரப்பிள்ளைக்கு என்ன சொல்லுறது ,பறை நாயள்.எங்கட பிள்ளை என்ன துவக்கு தூக்கினவனே ஏன் பிடிச்சவங்கள் "

எல்லா  கேள்விகளும் காற்றில் எறிந்து எறிந்து மீண்டும் அவர்களிடமே திரும்பியபடி  இருந்தது .கடைசி வரைக்கும் அம்மா வரேல்ல .பிறகு பார்கிராவாம் அப்பொஇயின்மண்ட் குடுத்திருக்கிரா ,எனக்கு வாயில தூசனம் தான் வந்தது .

(இன்னும் நிறைய  குறைகளையும் இந்த நேரத்தில் பார்க்க முடிந்தது ,முடிந்தால் பின்பு விரிவாக எழுதுகிறேன் )ஒரு துளி கண்ணீரின் முன்

இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை

ஓ இதுவொரு மகா அழுகை .-கிரிஷாந்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக